ஒரு நாள்ல, உங்களுடைய 1440 நிமிஷத்துல தயவு செஞ்சி என் வாழ்க்கைக்காக ஒரு 5 நிமிடத்த செலவு செய்ங்க PLEASE...

அன்பார்ந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கங்க,

S.D.ரமேஷ்செல்வன் ஆகிய நான் விஜயகாந்த் சார் நடித்த அவருடைய 125வது படமான "உளவுத்துறை" மற்றும் அருண் விஜய் நடித்த "ஜனனம்" படத்தையும் இயக்கி இருக்கிறேங்க.

இப்போ சத்யராஜ் சார் அவர்கள் நடித்த "கலவரம்" என்கிற படத்த இயக்கி முடிச்சிட்டேங்க. நான், ஏதாவது நல்ல விசயத்த மக்களுக்கு சொல்லனும்னு விரும்பறவங்க. அந்த வகையில் நம்ம நாட்டுல சில முக்கிய புள்ளிகள், தலைவர்கள் தங்களுடைய சுய நலத்திற்காக வன்முறை, தீவிரவாதம், கலவரம்னு தூண்டிவிட்டு விட்டு வேடிக்கை பார்ப்பாங்க. அதனால அப்பாவி மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து தான் இந்த "கலவரம்" படத்த இயக்கி இருக்கேங்க.

என்னுடைய நண்பன் T.R.ரவிச்சந்திரன் தன்னுடைய வீட்டை வித்துட்டு என் மேலே இருக்கிற நம்பிக்கையில இந்த படத்த பண்ணியிருக்காங்க. படம் ரொம்ப நல்லா வந்திருக்குங்க. இது வரைக்கும் கடந்த 4 மாசத்துல இந்த கலவரம் படத்த திரைக்கு கொண்டுவர வியாபாரத்துக்காக 35 காட்சிகள் PREVIEW SHOW போட்டு காண்பிச்சிட்டோம். படம் பார்த்த முக்கிய நபர்கள், மற்றும் V.I.Pகள் அனைவரும் படம் SUPER, விருவிருனு போகுது , MAKING ரொம்ப QUALITY-யா இருக்குது ஆனா SEX இல்ல, COMEDY இல்ல, Commerical இல்ல இப்படி மக்களுக்கு Advice-யும் Message-ம் சொன்னா யாரு பார்ப்பாங்க? முதல்ல மக்கள ஏமாத்த கத்துக்கங்க, அப்பதான் நீங்க ஜெயிக்க முடியும், பணமும் சம்பாதிக்க முடியும்னு சொல்லிட்டு PREVIEW SHOW-லியே Rs.6,00,000 காலி பண்ணது மட்டுமில்லாம கால் மேல கால் போட்டு படத்தையும் பார்த்துட்டு Tiffen,Coffee,Cooldrinks-ன்னு Free-யா சாப்பிட்டுட்டு என் நண்பன கடனாளியா ஆக்கிட்டாங்க. படத்துக்காக அவன் வட்டி, வட்டிக்கு வட்டி, கந்து வட்டி, SPEED வட்டி இப்படி எல்லாம வாங்கி இன்னிக்கு நடு தெருவுல நிக்கிறோம்ங்க. ஏன் உங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொன்னா ஏத்துக்க மாட்டிங்களா?

மரத்த வெட்டுவாங்க, பஸ்ஸ கொளுத்துவாங்க, நடுரோட்ல நம்மல கொல்லுவாங்க, வன்முறை, தீவிரவாதம், கலவரம்னு செய்வாங்க. அப்புறம் தலைவர் ஆயிடுவாங்க. மக்கள் அப்பாவியா நிக்கனுமா? இவங்கள தட்டி கேட்கிற மாதிரி படம் எடுக்கும் போது sex, Comedy, Commerical- னு சொன்னா விஷயம் எப்படி உங்களுக்கு வந்து சேரும்? மருந்துன்னா கஷப்பாதான் இருக்கும், Dress-சை கழட்டி போட்டுட்டு Bed Room-ல ஆணும், பெண்ணும் நெருக்கமா இருக்கிற மாதிரி பலான படம் Super-அ எடுக்க எனக்கும் தெரியும்ங்க. அந்த படம் எடுக்க நான் D.F.Tech படிச்சி GOLD MEDAL வாங்கி இருக்க வேண்டாமே. தயாரிப்பாளர் A.S.இப்ராஹிம் ராவுத்தர் அடிக்கடி எங்கிட்ட சொல்லுவார் "சினிமாங்கிறது தெய்வம் மாதிரி, அதை உண்மையா நேசிச்சா நிச்சயமா ஜெயிக்கலாம்னு". அந்த தெய்வத்தை கொச்சைப்படுத்த விரும்பலங்க.

உளவுத்துறை, ஜனனம் படம் பார்த்து இருந்தீங்கனா உங்களுக்கு என் திறமை தெரியும். இல்ல, அந்த படம் பார்த்தவங்களையாவது கேளுங்க. கலவரம் படத்த நல்ல MESSAGE-டன் QUALITY-யா Best VISUAL MAKING-உடன் இயக்கி இருக்கங்க. நீங்க செலவு செய்யற 2 மணி நேரமும் Rs.50-வும் தான் என்னுடைய, என் தயாரிப்பாளருடைய, எங்க குடும்பத்துடைய தலையெழுத்தையே மாத்துமுங்க, தயவு செய்து இந்த படத்த பார்த்து எங்க வாழ்க்கையை மாத்துங்க.

தியேட்டருக்கு வாங்க படம் பார்த்துட்டு வெளியே வருபவர்கள் கிட்ட கலவரம் படம் எப்படினு கேளுங்க. குப்பை, டப்பா, WASTE-னு சொன்னா உள்ளேயே வராதீங்க. நல்லா இருக்குனு சொன்னா உள்ள வந்து படம் பாருங்க. நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும்.
        அன்புடன்

உங்கள் ஆதரவை தேடும்

S.D.ரமேஷ்செல்வன்
திரைப்பட இயக்குனர்